Home நாடு கோலகுபு பாரு : பாங் சோக் தாவ் – ஜசெக, பக்காத்தான் வேட்பாளர்

கோலகுபு பாரு : பாங் சோக் தாவ் – ஜசெக, பக்காத்தான் வேட்பாளர்

415
0
SHARE
Ad

கோலகுபு பாரு : எதிர்பார்த்ததைப் போலவே வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங்-கின் பத்திரிகைச் செயலாளர் பாங் சோக் தாவ் என்ற பெண்மணி கோலகுபுபாரு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான ஜசெக-பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் இந்த அறிவிப்பை வெளியிட்டார். 31 வயதான பாங் சோக் தாவ் அம்பாங் வட்டாரத்தைச் சேர்ந்தவர்.

யூனிடென் என்னும் தெனாகா நேஷனல் பல்கலைக் கழகத்தின் மின்சாரம், மின்னியல் துறை பட்டதாரியான பாங் 2018-2020 காலகட்டத்தில் தொழில்நுட்பம்,  சுற்றுச்சூழல் அமைச்சரின் செயலாளராகப் பணியாற்றியிருக்கிறார். 2020-2022 காலகட்டத்தில் ஜசெக பிரச்சார ஊடகமான ஊபா டிவி என்னும் ஊடகத்தின் தயாரிப்பாளராக செயல்பட்டார்.

#TamilSchoolmychoice

இன்று புதன்கிழமை இரவு (ஏப்ரல் 24) நடைபெற்ற ஜசெக நிகழ்ச்சி ஒன்றில் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

கோலகுபுபாரு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 27-ஆம் தேதி நடைபெறும். வாக்களிப்பு மே 11-ஆம் நாள் நடைபெறும்.