கோலாலம்பூர்: பொருள் மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அரசாங்கம் திரும்பக் கொண்டு வரப்போவதில்லை என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.
அவ்வரியை திரும்பக் கொண்டுவருவதற்கான பொருளாதார வல்லுநர்களின் எந்தவொரு திட்டத்தையும் கேள்விப்படவில்லை என்று அவர் கூறினார்.
“கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டியை நாம் இரத்து செய்தோம். அதை மீண்டும் கொண்டுவருவதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை” என்று இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
கடந்த ஜூலை 24-ஆம் தேதி, துணை நிதியமைச்சர் டத்தோ அமிருடின் ஹம்சா, இந்த ஆண்டு 22 பில்லியன் ரிங்கிட்டுக்கு எஸ்எஸ்டி வசூலிக்க அரசாங்கம் கணித்துள்ளது என்று கூறியிருந்தார்.