Home கலை உலகம் நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து

729
0
SHARE
Ad

சென்னை : பிரபல நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யப் போவதாக சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளார். தமிழ் நாட்டிலும் சினிமா வட்டாரங்களிலும் இது தற்போது பரபரப்பான செய்தியாக உலா வருகிறது.

நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004-ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தனுஷ் திடீரென தனது டுவிட்டர் பக்கத்தில் விவாகரத்து செய்தியை இன்று செவ்வாய்க்கிழமை பதிவிட்டார்.

#TamilSchoolmychoice

“18 ஆண்டுகளாக நாங்கள் இருவரும் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக வாழ்ந்து வந்தோம். எங்களின் பயணத்தில் நல்ல வளர்ச்சி, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் தன்மை, விட்டுக்கொடுக்கும் தன்மை ஆகியவை இருந்தது. ஆனால் இன்று ஐஸ்வர்யாவும் நானும் தனித்தனியாக பிரிய முடிவு செய்திருக்கிறோம்” என தனுஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் தங்களின் தனிப்பட்ட முடிவுக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் என்றும் தனுஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.