Home கலை உலகம் தனுஷ் படங்களில் முதல் நாளில் அதிக வசூல் சாதனை படைத்த “ராயன்”

தனுஷ் படங்களில் முதல் நாளில் அதிக வசூல் சாதனை படைத்த “ராயன்”

279
0
SHARE
Ad

சென்னை : நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 26) உலகம் முழுவதும் வெளியிடப்பட்ட ‘ராயன்’ திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

தனுஷ் கதாநாயகனாக நடித்து இயக்கியிருக்கும் படம். கதாநாயகன் – சொந்த இயக்கம் – என்பதால் அறிமுகப் பாட்டு, தனக்குப் பிடித்த கதாநாயகி என்றெல்லாம் படத்தைக் கெடுக்காமல், ஜோடியில்லாமல் நடித்திருக்கிறார் தனுஷ்.

அதிலும் ஒட்ட வெட்டப்பட்ட தலைமுடியுடன் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருக்கிறார் தனுஷ். தன்னுடன் நடித்த சக நடிகர்களுக்கும் போதிய வாய்ப்பு வழங்கியிருக்கிறார் தனுஷ். குறிப்பாக தன் தம்பிகளாக நடித்திருக்கும் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் தங்கையாக நடித்திருக்கும் துஷாரா விஜயன் ஆகியோருக்கும் சம வாய்ப்பு கொடுத்து நடித்திருக்கிறார் தனுஷ்.

#TamilSchoolmychoice

அதை விட முக்கியமாக, தனக்கு வில்லனாக நடித்த எஸ்.ஜே.சூர்யாவுக்கும் படம் முழுக்க நிறைய காட்சிகளை அமைத்து படத்தை இயக்கியிருந்தார் தனுஷ்.

படத்தின் முதல் பாதி பிரமாதமாக அமைந்திருந்தது. ஆனால், இடைவேளைக்குப் பிறகு படத்தில் ஏகப்பட்ட கொலைகள், ஒரு தனிமனிதன் அத்தனை பேரை வெட்டிச் சாய்ப்பது என சினிமாத்தனமாக கதை நகர்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை படத்திற்கு மேலும் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறது.

இருப்பினும், மொத்தத்தில் படம் நன்றாக இருப்பதால், வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. முதல் நாள் மட்டும் 12.5 கோடி ரூபாய் இந்திய அளவில் வசூலித்திருக்கிறது ராயன்.

தனுஷ் நடித்த கர்ணன் படம் முதல் நாளில் ரூ. 10.40 கோடி வசூல் செய்தது, தற்போது அந்த வசூல் சாதனையை ராயன் படத்தின் முதல் நாள் வசூல் முறியடித்துள்ளது. தனுஷ் நடித்த படங்களில் முதல் நாள் அதிக வசூல் ஈட்டிய பாடமாக ராயன் சாதனை படைத்திருக்கிறது.