Home உலகம் அல்கொய்டா தலைவர் கொல்லப்பட்டதற்கு பைடனுக்கு ஒபாமா பாராட்டு

அல்கொய்டா தலைவர் கொல்லப்பட்டதற்கு பைடனுக்கு ஒபாமா பாராட்டு

474
0
SHARE
Ad
அய்மான் அல்-ஜவாஹிரி

வாஷிங்டன் : சிஐஏ என்னும் அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறை ஆளில்லா சிறு விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் அல்கொய்டா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 1) கொல்லப்பட்டார்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தபோது, அமெரிக்க அதிரடிப் படையினர் பாகிஸ்தானில் நுழைந்து அல்கொய்டாவின் தலைவர் ஒசாமா பின் லேடனைச் சுட்டுக் கொன்றனர்.

அதற்குப் பின்னர் இப்போதுதான் அல்கொய்டாவின் முக்கியத் தலைவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதற்கு ஜோ பைடனின் தலைமைத்துவத்துக்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஒபாமா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “செப்டம்பர் 11 தாக்குதலுக்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு, அந்த பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவரும், அல்-கொய்தாவின் தலைவரான அய்மான் அல்-ஜவாஹிரி இறுதியாக நீதியின் முன் நிறுத்தப்பட்டுள்ளார். அதிபர் பைடனின் தலைமைக்கு பாராட்டுக்கள். இந்த தருணத்திற்காக பல ஆண்டுகளாக உழைத்த உளவுத்துறை அதிகாரிகள் தங்களில் ஒருவருக்கு கூட சிறிய பாதிப்பும் இன்றி இதை நிகழ்த்தி காட்டியுள்ளனர்” எனப் பாராட்டு தெரிவித்துள்ளார்.