Home உலகம் சீனாவின் எதிர்ப்பையும் மீறி நான்சி பெலோசி தைவான் சென்றடைந்தார்

சீனாவின் எதிர்ப்பையும் மீறி நான்சி பெலோசி தைவான் சென்றடைந்தார்

569
0
SHARE
Ad
நான்சி பெலோசி – அமெரிக்க பிரதிநித்துவ அவையின் தலைவர்

தைப்பே : “நெருப்புடன் விளையாடாதீர்கள்” என சீனா விடுத்த எச்சரிக்கையையும் மீறி அமெரிக்க பிரதிநிதித்துவ மன்றத்தின் அவைத் தலைவர் நான்சி பெலோசி இன்று செவ்வாய்க்கிழமை தைவான் வந்து சேர்ந்தார்.

பெலோசியையும் அவரின் குழுவினரையும் ஏற்றிக் கொண்டு வந்த சிறப்பு விமானம் தைவான் தலைநகர் தைப்பேயில் தரையிறங்கியது.

இதைத் தொடர்ந்து சீனாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்த பதற்றம் ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

தைவான் சீனாவின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது.