கோலாலம்பூர் – கடந்த வெள்ளிக்கிழமை மே 26-ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெற்ற டிஎன் 50 எனப்படும் 2050 தேசிய உருமாற்றத் திட்டம் குறித்து அந்தத் திட்டத்தின் தலைவரும் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சருமான கைரி ஜமாலுடின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடலில் பிரதமர் நஜிப் துன் ரசாக் கலந்து கொண்டார்.
இந்தக் கலந்துரையாடலில் இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சருமான டத்தோ எம்.சரவணனும் கலந்து கொண்டார்.
டிஎன்-50 கலந்துரையாடலுக்கு வருகை தரும் நஜிப் – உடன் கைரி ஜமாலுடின், சரவணன்…
‘எதிர்கால வட்டங்கள்’ என்ற புதிய அணுகுமுறை ஒன்றையும் இந்தக் கலந்துரையாடலின்போது டின்-50 திட்டத்தின் ஓர் அங்கமாக நஜிப் தொடக்கி வைத்தார்.
“எதிர்கால வட்டங்கள்” (Circles of the Future) மூலம் பல்வேறு துறைகளைச் சேர்ந்த இளைய சமுதாயத்தினர் 20 அல்லது 30 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டு டிஎன்-50 கலந்துரையாடல்களுக்கு ஆலோசனைகளும் கருத்துப் பரிமாற்றங்களும் வழங்குவர்.
டிஎன்-50 திட்ட வரைவுகளைப் பார்வையிடும் நஜிப் – அருகில் சரவணன்…
வெள்ளிக்கிழமை நடந்த கலந்துரையாடலின்போது டின்-50 திட்டத்தின் சின்னத்தையும் நஜிப் அறிமுகப்படுத்தினார்.
ஜனவரி 19-ஆம் தேதி டிஎன்-50 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இதுவரை 12 இலட்சம் இளைய சமுதாயத்தினரோடு நடத்தப்பட்ட சந்திப்புகளின் மூலம் சுமார் 33,000 விருப்பக் கருத்துகள் பெறப்பட்டிருப்பதாகவும் நஜிப் தெரிவித்தார்.