Home உலகம் இங்கிலாந்து இளவரசர் ஹாரி, மேகன் மார்க்கல் மகனுக்கு பெயர் சூட்டப்பட்டது!

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, மேகன் மார்க்கல் மகனுக்கு பெயர் சூட்டப்பட்டது!

863
0
SHARE
Ad

இங்கிலாந்து: பிரிட்டன் அரச குடும்பத்தினர், இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்கல் தம்பதிக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு ஆர்ச்சி மவுன்ட்பேட்டன் வின்ட்சர் என்று பெயர் சூட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை, ஹாரி மற்றுறும் மேகன் மார்க்கல் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்தச் செய்தியை அரச குடும்பத்தினரின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்ததை தொடர்ந்து இங்கிலாந்து முழுவதும் விழாக்கோலம் பூண்டது.

இங்கிலாந்து மக்கள் தங்களது குட்டி இளவரசருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இளவரசர் ஹாரியின் மகனுக்கு ஆர்ச்சி மவுன்ட்பேட்டன் விண்ட்சர் என அரச குடும்பத்தினர் பெயர் சூட்டியுள்ளனர். மேலும் இளவரசர் ஹாரி, மார்க்கல் தம்பதி குட்டி இளவரசரை உலகிற்கு அறிமுகம் செய்தும் வைத்தனர்