புது டில்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் விடுதலைக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் ஏழு பேரை விடுவிப்பது தொடர்பாக ஆளுனரே முடிவெடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், நளினி, ஜெயக்குமார் ஆகியோர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
அவர்களை விடுவிப்பது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு உடனடியாக தீர்மானம் நிறைவேறியது.
இந்த தீர்மானம் ஆளுனருக்கு அனுப்பப்பட்ட நிலையில், அதில் அவர் கையெழுத்திடாமல் தாதமதம் செய்வதாக விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையே குண்டுவெடிப்பின்போது ராஜிவ் காந்தியுடன் உயிரிழந்தவர்களுடைய உறவினர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகினர்.
அவர்கள் ஏழு பேரை விடுவிக்க கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஏழு பேரின் விடுதலைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்துள்ளது.