மாநிலம், இனம், பாலினம், வருமானம் மற்றும் வயது அடிப்படையில் 1,007 பேருடனான தொலைபேசி மூலமாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 40 விழுக்காட்டினர் நம்பிக்கைக் கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். அவர்களில், 16 விழுக்காட்டினர் பாஸ் கட்சிக்கும் 15 விழுக்காட்டினர் தேசிய முன்னணிக்கும் வாக்களித்துள்ளனர்.
43 விழுக்காடு அதிக வருமானம் பெறும் மக்கள் நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளனர். ஆயினும், நடுத்தர வருமானம் பெறுபவர்களில் வெறும் 30 விழுக்காட்டினர் மட்டுமே நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
இந்தவேறுபாடுகளை வைத்து கடந்த இடைத் தேர்தல்களில் அம்னோ மற்றும் பாஸ் கூட்டணி வெற்றிக்கு காரணமானவர்கள் இந்த நடுத்தர வருமானம் பெறுபவர்கள் என்று கருதலாம் என அது குறிப்பிட்டுள்ளது.
தீபகற்க மாநிலங்களில் மட்டுமில்லாமல் சரவாக்கிலும் நம்பிக்கைக் கூட்டணிக்கு எதிரான ஆதரவு வலுவாக உள்ளதை இந்த கருத்துக் கணிப்பு குறிப்பிடுகிறது.