Home உலகம் இளவரசர் ஹாரி – மேகன் தம்பதியரின் மகனின் முதல் தோற்றம்

இளவரசர் ஹாரி – மேகன் தம்பதியரின் மகனின் முதல் தோற்றம்

861
0
SHARE
Ad

இலண்டன் – தங்களின் முதல் மகனை ஈன்ற மகிழ்ச்சியில் இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகன் மெர்க்கலும் இன்று புதன்கிழமை தங்களின் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற அவர்களின் திருமணத்தைத் தொடர்ந்து, கர்ப்பமான மேகன் மெர்க்கல் திங்கட்கிழமை (மே 6) காலை (பிரிட்டன் நேரம்) அழகான ஆண் குழந்தை ஒன்றை ஈன்றெடுத்தார்.

7 பவுண்டு 3 அவுன்ஸ் எடை கொண்ட ஆண்குழந்தை பிறந்திருப்பதைத் தொடர்ந்து தாயும் சேயும் நலமாக உள்ளனர் என்றும் தங்களின் முதல் குழந்தையின் வரவால் தாங்கள் குதூகலம் அடைந்திருப்பதாகவும் இளவரசர் ஹாரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திங்கட்கிழமையன்று அறிவித்தார்.