Home வணிகம்/தொழில் நுட்பம் இந்தியாவின் பிக்பாஸ்கெட் நிறுவனத்தில் அலிபாபா முதலீடு

இந்தியாவின் பிக்பாஸ்கெட் நிறுவனத்தில் அலிபாபா முதலீடு

1000
0
SHARE
Ad

புதுடில்லி – சீனாவின் மிகப் பெரிய இணைய வணிக நிறுவனமான அலிபாபா தென்கொரிய நிறுவனம் ஒன்றுடனும், சிடிசி குரூப் என்ற நிறுவனத்துடனும் இணைந்து இந்தியாவின் பல்பொருள் அங்காடிச் சந்தையைக் கொண்டுள்ள பிக்பாஸ்கெட் நிறுவனத்தில் 150 மில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்கிறது.

இந்த முதலீடுகளைக் கொண்டு பிக்பாஸ்கெட் தனது நடப்பு சந்தைகளை விரிவாக்கும் என்பதோடு, புதிய சந்தைகளையும் உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபடும். பிக்பாஸ்கெட் இந்தியாவின் மிகப் பெரிய இணைய வணிகத்தைக் கொண்டிருக்கும் நிறுவனமுமாகும்.

2011-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட பிக் பாஸ்கெட் தற்போது 10 நகர்களிலும் மேலும் 15 இரண்டாவது நிலை நகர்களிலும் இயங்குகிறது. நடிகர் ஷாருக்கான் இடம் பெறும் தொலைக்காட்சி விளம்பரப் படங்களால் பிக் பாஸ் கூடுதலான பயனர்களை அண்மைய ஆண்டுகளில் பெற்றிருக்கிறது.