Home நாடு ஓராண்டு காலத்தில் நம்பிக்கைக் கூட்டணி அரசு நிறைய செய்திருக்கிறது!- பிரதமர்

ஓராண்டு காலத்தில் நம்பிக்கைக் கூட்டணி அரசு நிறைய செய்திருக்கிறது!- பிரதமர்

671
0
SHARE
Ad

புத்ராஜெயா: கடந்த ஓர் ஆண்டு காலத்தில் நம்பிக்கைக் கூட்டணி அரசு அதிகமான சாதனைகளை எட்டியுள்ளது என பிரதமர் மகாதீர் முகமட் கூறினார்.  நாம் அறிந்த மலேசியாவை மீண்டும் கொண்டு வருவதற்கான மனநிலையை தற்போதைக்கு அரசாங்கம் கொண்டுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

“நாங்கள் எங்களது சாதனைகளைப் பற்றி கத்தி கூப்பாடு போடுவதில்லை. நாங்கள் வெற்றிப் பெறுவோம் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த கூட்டணி பலவீனமானது என்றும் அது உடைந்து விடும் என்றும் சிலர் கூறினர். ஆனால் நாங்கள் ஒன்று சேர்ந்து ஒத்துழைத்திருக்கிறோம், நாங்கள் மிகவும் ஒற்றுமையாகவும் இருக்கிறோம், எங்களது ஒரே நோக்கம் முன்பிருந்த மலேசியாவை மீண்டும் கொண்டு வருவதேஎன அவர் கூறினார்.

அமைச்சரவையில் அனுபவமற்ற அமைச்சர்கள் இருக்கிற போதிலும், சிறப்பான அரசாங்கத்தை தாங்கள் வழி நடத்தி வருவதாகவும், கிழக்கு கடற்கரை இரயில் இணைப்புத் திட்டத்தில் 30 பில்லியன் வரையிலும் செலவினைக் குறைத்து நாட்டிற்கு நன்மையைச் செய்திருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

முன்னர் சரியான சட்ட விதிமுறை இல்லை. மக்கள் கடுமையான குற்றங்களுக்காக கைது செய்யப்படலாம். ஆனால், இப்போது, ​​எந்த குற்றச்சாட்டுகளும் நீதிமன்றங்களுக்குச் செல்கின்றன. நீதித்துறை மற்றும் நிருவாகத்தின் அதிகாரத்தை பிரித்து நாங்கள் செயல் படுத்துகிறோம்” என்று பிரதமர் கூறினார்.

“நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் முக்கிய இடம் பிடித்தது சுங்கசாவடி கட்டண ஒழிப்பு. இது நடைமுறைபடுத்த வேண்டுமானால் அரசாங்கம் 30 பில்லியன் ரிங்கிட் பணத்தை செலவு செய்ய வேண்டியிருக்கும். இருக்கிற 30 பில்லியன் பணத்தை அதற்காக நாம் செலவு செய்ய வேண்டுமா? அல்லது வேறொரு நல்ல திட்டங்களுக்காக செலவு செய்ய வேண்டுமா?” என பிரதமர் கேள்வி எழுப்பினார்.

பெரும்பாலான மக்கள் இலவச அன்பளிப்புக்காக ஓர் அரசாங்கத்தை ஆதரிப்பதை பிரதமர் நகைத்துப் பேசினார். மலேசியர்கள் அவர்களது வாழ்க்கை நிலைமையை மேம்படுத்துவதற்கு ஒரே வட்டத்திற்குள் இருந்து சிந்தனை செய்வதை தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.