Home நாடு அயல் நாட்டு இந்திய வம்சாவளியினருக்கான ஓ.சி.ஐ. அட்டை குறித்த விளக்கம்!

அயல் நாட்டு இந்திய வம்சாவளியினருக்கான ஓ.சி.ஐ. அட்டை குறித்த விளக்கம்!

390
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இந்திய வம்சாவளியினரும் அவர்களின் குடும்பத்தினரும் இந்தியாவில் தங்குவதற்கும், வேலை செய்வதற்கும் வசதியாக அவர்களுக்கு ஓசிஐ என்னும் (Overseas Citizenship of India – OCI) அடையாள அட்டை சலுகையை இந்திய அரசாங்கம் அயல்நாட்டு தூதரகங்களின் மூலம் வழங்கி வருகிறது.

மலேசியாவிலும் ஓசிஐ அடையாள அட்டை ஆயிரக்கணக்கில் இதுவரை வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த ஓசிஐ குறித்து மேலும் விளக்கங்கள் வழங்கவும், நடைமுறைகள் குறித்து விளக்கவும் இலவச விளக்கக் கூட்டம் ஒன்று இயங்கலை வழி நடத்தப்படவிருக்கிறது. தென்னிந்திய கொங்கு வர்த்தக சங்கம் (South Indian Kongu Business Association) இந்த விளக்கக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறது.

#TamilSchoolmychoice

இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 19) இரவு 8.30 மணிக்கு இந்த விளக்கக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்த விளக்கக் கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் திரு. பழனியை +60132999144 என்ற கைப்பேசி எண்ணிலும் அல்லது திரு கிருஷ்ணனை+6012 3059343 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இந்த விளக்கக்கூட்டம் சூம் மெய்நிகர் சந்திப்பின் வழி நடைபெறும். அதற்கான இணைப்பு பின்வருமாறு:

Zoom Meeting Link:
https://us02web.zoom.us/j/6013299914

Zoom Meeting ID.
Meeting ID: 601 329 9914

இந்த விளக்கக் கூட்டத்தில் இணைவதற்கு கடவுச் சொல்லோ (பாஸ் வோர்ட்) முன்கூட்டிய பதிவோ தேவையில்லை.

இந்த விளக்கக் கூட்டத்தில் 500 பேர் மட்டுமே பங்கேற்க வசதி இருப்பதால் முதலில் பங்கு பெறுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

நேரலையாக நடைபெறும் இந்த விளக்கக் கூட்டத்தில் பங்கு பெற்று பலன்பெறுமாறு ஆர்வமுள்ளவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.