Home உலகம் டிரம்ப் – துப்பாக்கிச் சூட்டால் அனுதாப அலை பெருகுகிறதா?

டிரம்ப் – துப்பாக்கிச் சூட்டால் அனுதாப அலை பெருகுகிறதா?

319
0
SHARE
Ad
டிரம்புடன் அவரின் துணையதிபர் வேட்பாளர் ஜே.டி.வான்ஸ்

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அவர் சார்ந்த குடியரசுக் கட்சியால் உறுதி செய்யப்பட்டிருக்கிறார். தனது துணையதிபர் வேட்பாளராக ஜே.டி.வான்ஸ் என்ற ஓஹையோ மாநில செனட்டரை டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதில் சுவாரசியம் என்னவென்றால் வான்சின் மனைவி உஷா வான்ஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராவார்.

துப்பாக்கிச் சூட்டால் ஏற்பட்ட காயத்தால், காதில் போடப்பட்டிருந்த பிளாஸ்திரியுடன் டிரம்ப் காணப்பட்டார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் ஜோ பைடன் முதுமை, ஞாபக மறதி காரணமாக போட்டியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என அறைகூவல்கள் அதிகரித்து வருகின்றன.

எனினும் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதில்லை என்பதில் இதுவரையில் பைடன் உறுதியாக இருந்து வருகிறார்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தால் டிரம்பின் மீதான அனுதாப அலை அதிகரித்திருப்பதாக கருதப்படுகிறது. இந்நிலையில் டிரம்பை எதிர்க்க ஜனநாயகக் கட்சி வலிமையான ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டுமென கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் பைடனின் துணையதிபராக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், டிரம்பின் துணையதிபராக அறிவிக்கப்பட்டிருக்கும் வான்சின் மனைவி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராக இருப்பது, தொடர்ந்து இந்திய வம்சாவளியினர் அமெரிக்க அரசியலில் காட்டி வரும் தீவிரத்தைப் புலப்படுத்துகிறது.