Home கலை உலகம் ராகா அறிவிப்பாளர் விக்னேஸ்வரி சுப்ரமணியத்துடன் நேர்காணல்!

ராகா அறிவிப்பாளர் விக்னேஸ்வரி சுப்ரமணியத்துடன் நேர்காணல்!

313
0
SHARE
Ad
விக்னேஸ்வரி சுப்ரமணியம்

நேர்காணல் – விக்னேஸ்வரி சுப்ரமணியம், ராகா அறிவிப்பாளர்

1. உங்களின் பின்னணி மற்றும் உங்களைப் பற்றிய சுவாரசியமான விஷயங்களைப் பற்றி எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

வணக்கம். நான் விக்கி. வார நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வணக்கம் ராகா அங்கத்தைத் தொகுத்து வழங்குகிறேன். நான் வங்கி மற்றும் நிதியியல் துறையில் கப்லான் சிங்கப்பூரில் படித்தேன். பின்னர் நான் மனிதவள மேலாண்மைத் துறையில் எனது பணியைத் தொடர்ந்தேன். மனிதவளத்துறையில் 5 வருட அனுபவத்தைப் பெற்றப் பிறகு, ஆஸ்ட்ரோவின் அல்டிமேட் ஸ்டார் சர்ச் 2022-இல் நான் வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து, தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், ராகா அறிவிப்பாளராகவும் எனது ஊடகப் பயணத்தைத் தொடர்ந்தேன்.

#TamilSchoolmychoice

2. வானொலி அறிவிப்பாளராகுவதற்கானப் பின்னணியில் உங்களின் உத்வேகம் என்ன?

வானொலி அறிவிப்பாளராவது நான் எதிர்பாரா ஒன்று. 8 முதல் 5 மணி வரையிலான வேலைகளிலே எனக்கு நாட்டம் அதிகம். எனவே, வங்கித் துறையில் எனது படிப்பைத் தொடர்ந்தேன். இருப்பினும், மக்களுடன் தொடர்புக்கொள்வதையும் அவர்களைச் சிரிக்க வைப்பதையும் நான் விரும்பினேன். நான் கலைத்துறையில் ஈடுபட வேண்டும் என்பது எனது குடும்பத்தினரின் விருப்பம் என்பதால் அல்டிமேட் ஸ்டார் சர்ச் 2022-க்கான ஆடிஷன் விளம்பரத்தைப் பார்த்தவுடன் அதில் பங்கேற்க முடிவுச் செய்தேன்.

3. உங்களின் வணக்கம் ராகா அங்கத்தில் சில சிறப்பம்சங்களை இரசிகர்களுடன் பகிர்ந்துக்கொள்ளவும்.

அழைப்பாளர்கள் தினசரி விவாதத் தலைப்பின் அடிப்படையில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளும் காலை 10 மணிப் பிரிவான ‘நீ சொல்லு பா’; காலை 11 மணிக்குத் தொடங்கும் விளையாட்டு நிகழ்ச்சியில் முதல் அழைப்பாளர் ஒரு திரைப்படம் தொடர்பானத் துணுக்குப் பகிரப்பட்டவுடன் அதைச் சார்ந்தக் கேள்விக்கு சரியாகப் பதிலளித்துப் பாடலை அர்ப்பணிக்கும் வாய்பைப் பெறும் பிரிவானக் ‘குளுவ காத்துலே தூதுவிட்டு’; மற்றும் நேயர்கள் அழைத்து தங்கள் இன்ப துன்ப நிகழ்வுகளைப் பகிர்ந்துக் கொள்ளும் மதியம் 12 மணிக்கு ஒலியேறும் எனக்குப் பிடித்த பிரிவான ‘காதுமா’ ஆகியவை வணக்கம் ராகா அங்கத்தில் இடம் பெறும் பல்வேறு வேடிக்கையானப் பிரிவுகளாகும். வணக்கம் ராகா அங்கத்தில் எனது நோக்கம் நேயர்களின் நாளைப் பிரகாசமாக்குவதே ஆகும்.

4. உங்களைப் பொறுத்தவரைத் தொலைக்காட்சித் தொகுப்பாளராக இருப்பதற்கும் வானொலி அறிவிப்பாளராக இருப்பதற்கும் உள்ள சில வேறுபாடுகள் என்ன?

ஒற்றுமைகளைப் பொறுத்தவரை, தொலைக்காட்சி மற்றும் வானொலி இரண்டிலும் ஒரு படைப்பாளராக நான் இருக்கிறேன், இரசிகர்களை மகிழ்விப்பதே எனது முதன்மையானக் குறிக்கோள். வேறுப்பாடு என்னவென்றால், வானொலியில், உணர்வுகளை வெளிப்படுத்தப் பண்பேற்றத்தைக் குரலுடன் இணைத்துக் குரலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். டிவியில், ஒருவர் முகபாவனைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

5. ஒரே நேரத்தில் தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும், வானொலி அறிவிப்பாளராகவும் இருப்பதால், இரண்டு தொழில்களையும் எவ்வாறுச் சமநிலைப்படுத்திக் கையாளுகிறீர்கள் மற்றும் வேலை-வாழ்க்கை சமநிலையை எவ்வாறுக் கடைப்பிடிக்கிறீர்கள்?

என்னிடம் வாராந்திர அட்டவணைகள் உள்ளன. பணிகள் ஒன்றுடன் ஒன்று மோதுவதைத் தவிர்க்க நான் எப்போதும் ஒரு வாரத்திற்கு முன்பே எனது அட்டவணையைத் திட்டமிடுவேன்.

6. அறிவிப்பாளராக நீங்கள் எதிர்கொண்டச் சில சவால்கள் யாவை, அவற்றை எவ்வாறுக் களைந்தீர்கள்?

அழைப்பாளர்கள் இல்லாத நேரங்கள் உட்பட வானொலியில் எனது படைப்பைக் கையாள்வதே முக்கியச் சவாலாக இருந்தது. எனவே, ஒலிபரப்புக்கு முன் நான் பல்வேறு மாறுபாடுகளில் எனது பிரிவின் நிரலைப் பயிற்சி செய்துக் கொள்வேன்.

7. அறிவிப்பாளராக ஏதேனும் சுவாரசியமானத் திட்டத்தில் பணிப்புரிகிறீர்களா? ஆம் எனில், அதைப் பற்றிப் மேலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

வணக்கம் ராகா அங்கத்தில் இன்னும் பலச் சுவாரசியமானப் பிரிவுகளைக் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளேன். இணைந்திருங்கள்.

8. வானொலி அறிவிப்பாளராக உங்களின் சமீபத்தியச் சாதனைகள் அல்லது மைல்கற்களைப் பற்றிப் பகிர்ந்துக் கொள்ள முடியுமா?

இந்த ஆண்டு எனது மிக முக்கியமான சாதனை எனது சொந்த ராகா அங்கத்தைத் தொகுத்து வழங்குவதாகும். நான் ஒரு பகுதி நேர அறிவிப்பாளராக ஆரம்பித்து ஒரு வருடத்திற்குள் எனது சொந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நிலைக்கு விரைவாக முன்னேறினேன். இது உண்மையிலேயே ஒரு கனவு நனவானத் தருணமாகும். ராகா நிர்வாகத்தின் நம்பிக்கைக்கு நன்றி.

9. வானொலி அறிவிப்பாளராக உங்களின் வெற்றியை எவ்வாறு வரையறுக்கிறீர்கள்?

எனது அங்கத்தைக் கேட்டு ஒரு நேயரின் ஒரு நாளாவது சிறப்பாக அமைந்தால், அதுவே எனது வெற்றி.

10. வானொலி அறிவிப்பாளராக உங்களின் குறிப்பிடத்தக்க நினைவகம் அல்லது அனுபவத்தைப் பகிர்ந்துக் கொள்ள முடியுமா?

ராகா அறிவிப்பாளராக நான் மறக்க முடியாத தருணங்களில் ஒன்று, ஒரு நேயர் என்னைச் சந்திப்பதற்காக ஆஸ்ட்ரோவுக்கு ஒரு ரோஜா மற்றும் ஒரு செடி நாற்றுடன் வந்தது. என் அங்கம் அவருடைய வாழ்க்கையை எவ்வளவுச் சிறப்பாக்கியது என்பதை வெளிப்படுத்த அவர் என் பணியிடத்துக்கு வந்தார். ஒரு மணி நேரம் அவர் காத்திருந்தாலும் எனது பணியின் காரணமாக என்னால் அவரைச் சந்திக்க முடியவில்லை. இறுதியில், அவர் காவலர் அறையில் பரிசுகளை விட்டுச் சென்றார். இன்றுவரை ஒவ்வொரு பிரிவுக்குப் பிறகும் அவர் எனக்கு குறுஞ்செய்தி அனுப்புவார்.

11. வானொலி அறிவிப்பாளராக ஆக சில முக்கியக் குணங்கள் யாவை?

மனதின் இருப்பு முக்கியமானது. அதைத் தொடர்ந்து ஆக்கப்பூர்வமானப் பேச்சுத் திறன். எந்தவொரு சூழ்நிலையையும் எவ்வாறுக் கையாள்வது என்பதையும் அறிந்துக் கொள்வது அவசியம்.

12. வானொலி அறிவிப்பாளராக விரும்பும் ஒருவருடன் நீங்கள் பகிர்ந்துக் கொள்ள விரும்பும் ஓர் அறிவுரை என்ன?

ஆர்வமுள்ள வானொலி அறிவிப்பாளர்களுக்கு, எனது ஆலோசனை மிகவும் எளிதானது: தனித்துவமாக இருங்கள், நீங்களாக இருங்கள். பிறரைப்போல் இருக்க முயற்சிக்காதீர்கள். உங்கள் பாணியைக் கண்டுபிடிக்கும் வரைப் பரிசோதனைச் செய்யுங்கள்.

13. உங்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்திய முன்மாதிரி அல்லது வழிகாட்டியைப் பற்றிப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்?

அனைத்து ராகா அறிவிப்பாளர்களும் எனது முன்மாதிரிகள். அவர்களில் சிலரைக் கேட்டு வளர்ந்த நான், ஒரு புதுமுக அறிவிப்பாளராக ஒவ்வொருவரையும் ஒரு வழிகாட்டியாகக் கருதுகிறேன். அவர்களின் தாக்கம் எனக்கு நிறையப் படிப்பினைகளைக் கற்றுக் கொடுத்தது.

14. வானொலி அறிவிப்பாளராக நீங்கள் என்னத் தாக்கத்தை ஏற்படுத்த விருப்புகிறீர்கள்?

அவர்கள் எனது அங்கத்தை கேட்கும்போது அவர்களிடையே இணைப்பையும் மகிழ்ச்சியையும் உருவாக்கி எனது இரசிகர்களின் வாழ்க்கையைப் பிரகாசமாக்குவதே வானொலி அறிவிப்பாளராக எனது இலக்கு. நான் அவர்களின் வானொலி நண்பராக இருக்க விரும்புகிறேன்.

15. இரசிகர்களிக்கு நீங்கள் ஏதுவும் சொல்ல விரும்புகிறீர்களா?

அளவற்ற அன்புக்கும் ஆசீர்வாதங்களுக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். உங்களின் ஆதரவுதான் என்னை பலப்படுத்துகிறது. என்னைப் பொறுத்தவரை, எனது ரசிகர்களே எனது பலம். உங்களை மேலும் மகிழ்விக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்.