டிரம்ப் சமூக ஊடகங்களில், தான் சுடப்பட்டதாகவும் “வலது காதின் மேற்பகுதியில்” குண்டு பாய்ந்ததாகவும் கூறினார். முகத்தில் இரத்தம் படிந்த நிலையில் பேரணி மேடையிலிருந்து அவசரமாக அவர் அழைத்துச் செல்லப்பட்டார். டிரம்ப் பாதுகாப்பாக உள்ளதாகவும் இரகசிய சேவைப் பிரிவு தெரிவித்தது. டிரம்ப் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் பேரணிக்கு வெளியே “உயரமான இடத்திலிருந்து” துப்பாக்கி ஏந்தியவர் பல முறை சுட்டதாகவும், பின்னர் காவல் துறையினரால் அவர் கொல்லப்பட்டதாகவும் இரகசிய சேவை தெரிவித்தது. பேரணி நடந்த இடத்திற்கு வெளியே ஒரு கட்டிடத்தின் கூரையில் துப்பாக்கி ஏந்தியவர் இருந்ததாக அரசாங்க மையங்கள் தெரிவித்தன. சட்ட அமலாக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தச் சூட்டுச் சம்பவம் கொலை முயற்சியாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
ஜனாதிபதி ஜோ பைடன் சனிக்கிழமை இரவு இந்த வன்முறையைக் கண்டித்தார். விடுத்த அறிக்கையில் டிரம்ப் பாதுகாப்பாக இருப்பதற்கு தான் இறைவனுக்கு நன்றி சொல்வதாகவும் கூறியிருந்தார்.