Home நாடு ‘அன்வார் இப்ராகிம்: சிறை முதல் பிரதமர் வரை’ – இரா.முத்தரசன் நூலின் பினாங்கு அறிமுக விழா

‘அன்வார் இப்ராகிம்: சிறை முதல் பிரதமர் வரை’ – இரா.முத்தரசன் நூலின் பினாங்கு அறிமுக விழா

454
0
SHARE
Ad

மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் நீண்ட கால சமூக, அரசியல் போராட்டப் பயணத்தை ‘அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை’ என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளரும் அரசியல் ஆய்வாளருமான இரா.முத்தரசன்.

அந்நூலின் வெளியீட்டு விழா கோலாலம்பூரில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தேறியது. அதைத் தொடர்ந்து பினாங்கு மாநிலத்தில் இந்த நூலின் அறிமுக விழா எதிர்வரும் சனிக்கிழமை 13 ஜூலை 2024-ஆம் நாள் மாலை 4.30 மணி முதல் தேநீர் விருந்துபசரிப்புடன் கொம்தார் கட்டடத்தின் ஆடிட்டோரியம் ‘C’, மண்டபத்தில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமு தலைமை தாங்கி நூலை வெளியிடுகிறார்.

சிறப்பு வருகையாளர்கள் (இடமிருந்து) புலேந்திரன், அருணாசலம், ஹென்ரி, தினகரன், பார்த்திபன், மரியதாஸ்
#TamilSchoolmychoice

ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினரும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவருமான மாண்புமிகு ஆர்.எஸ்.என். ராயர், மாண்புமிகு செனட்டர் லிங்கேஸ்வரன் அருணாசலம், பினாங்கு பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர், மாண்புமிகு குமரன் கிருஷ்ணன் கல்வி அமைச்சரின் சிறப்பு செயலாளர் திரு. தியாகராஜ் சங்கரநாராயணன் ஆகியோர் இந்நூல் அறிமுகவிழாவில் சிறப்புரைகளும், வாழ்த்துரைகளும் வழங்கவிருக்கின்றனர்.

இந்நூல் அறிமுக விழாவுக்கு டத்தோஸ்ரீ கா.புலவேந்திரன், டத்தோஸ்ரீ ஆர்.அருணாசலம், டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம் ஆகிய பிரமுகர்களுடன் மஇகா பினாங்கு மாநிலத் தலைவர் டத்தோ ஜே.தினகரன், பினாங்கு இந்திய வர்த்தக சபைத் தலைவர் டத்தோ எஸ்.பார்த்திபன், துணைத் தலைவர் டத்தோ மரியதாஸ் கோபால் ஆகியோர் சிறப்பு வருகை மேற்கொள்கின்றனர். இந்த நூல் அறிமுக விழாவின் நிகழ்ச்சி நெறியாளராக மக்கள் ஓசை பினாங்கு மாநில நிருபர் செ.குணாளன் செயல்படுவார்.

செ.குணாளன் – நிகழ்ச்சி நெறியாளர்

பிரதமர் குறித்து தமிழில் முழுமையாக வெளிவந்திருக்கும் ஒரே நூல் இதுவாகும். அன்வார் இப்ராகிம் பற்றிய முழுமையான ஒரு வரலாற்றுப் பதிவாக இந்த நூல் உருவாகியிருக்கிறது. விறுவிறுப்பான நடையில், பரபரப்பான அரசியல் சம்பவங்களை நாவல் பாணியில் விவரிக்கும் அணுகுமுறையில் இந்த நூல் வித்தியாசமாகப் படைக்கப்பட்டுள்ளது.

 

 

இந்நூல் வெளியீட்டு விழாவுக்கு அனைவரும் திரண்டு வரவேண்டுமென ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.