Home உலகம் ஹாரி – மேகன் தம்பதியருக்கு முதல் குழந்தை

ஹாரி – மேகன் தம்பதியருக்கு முதல் குழந்தை

1372
0
SHARE
Ad

இலண்டன் – கடந்த மே மாதம் திருமணம் புரிந்து கொண்ட பிரிட்டிஷ் இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகன் மெர்க்கலும் தங்களின் முதல் குழந்தையை அடுத்த ஆண்டில் எதிர்பார்க்கின்றனர் என கென்சிங்டன் அரண்மனை அறிவித்துள்ளது.

மேகன் மெர்க்கல் தற்போது தாய்மையடைந்துள்ளதாகவும், அவர்களின் முதல் குழந்தை அடுத்த ஆண்டு இளவேனிற்காலத்தில் (Spring) அதாவது மார்ச் முதல் மே மாதம் இடைப்பட்ட காலத்தில் பிறக்கும் என்ற மகிழ்ச்சியான செய்தியை வெளியிடுவதாக கென்சிங்டன் அரண்மனை அறிவித்தது.

ஹாரி-மேகன் இருவரும் தற்போது ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கின்றனர்.