Home நாடு அன்வார் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார்

அன்வார் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார்

1213
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சக நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலத்த கரவொலிகளுக்கிடையில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று திங்கட்கிழமை பதவியேற்றார்.

சனிக்கிழமை, அக்டோபர் 13-ஆம் தேதி நடைபெற்ற போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் அன்வார் மிகப் பெரிய பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

இதற்கிடையில் அன்வாரின் வெற்றி குறித்து தான் பெரிதும் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் துன் மகாதீர் கூறியுள்ளார். “மிகப் பெரிய பெரும்பான்மையில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார். அதனால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவரும் எங்களின் கட்சியைச் சேர்ந்தவர்தானே?” என மகாதீர் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

தனது இடைத் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அன்வார் மகாதீருக்கு நன்றி தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.