Home நாடு பேராக் ஜசெக தேர்தல் : சிவநேசன் உதவித் தலைவரானார்

பேராக் ஜசெக தேர்தல் : சிவநேசன் உதவித் தலைவரானார்

877
0
SHARE
Ad

ஈப்போ – நேற்று ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 14) இங்கு நடைபெற்ற பேராக் மாநிலத்துக்கான ஜசெக தேர்தலில் பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும், சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான அ.சிவநேசன் (படம்) மாநில உதவித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இரண்டு உதவித் தலைவர்களில் ஒருவராக சிவநேசன் தேர்ந்தெடுக்கப்பட மற்றொரு உதவித் தலைவராக பேராக் மாநிலத்தின் மற்றொரு ஆட்சிக் குழு உறுப்பினரும் அரசியல் சாசன சட்ட வல்லுநருமான அசிஸ் பாரி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தெபிங் சட்டமன்ற உறுப்பினருமாவார்.

மாநிலத் தலைவருக்கான போட்டியில் தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களவையின் துணைத் தலைவருமான இங்கா கோர் மிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி.சிவகுமார் மாநிலத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அமைப்புக் குழு துணைச் செயலாளர்களில் ஒருவராக புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சிவசுப்பிரமணியம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட செயலவை உறுப்பினர்களில் பாசிர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினர் டெரன்ஸ் நாயுடுவும் ஒருவராவார்.