அவர்களின் திருமணத்தைத் தொடர்ந்து, கர்ப்பமாகி, பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்த மேகன் மெர்க்கல் இன்று திங்கட்கிழமை (மே 6) காலை (பிரிட்டன் நேரம்) அழகான ஆண் குழந்தை ஒன்றை ஈன்றெடுத்தார். 7 பவுண்டு 3 அவுன்ஸ் எடை கொண்ட ஆண்குழந்தை பிறந்திருப்பதைத் தொடர்ந்து தாயும் சேயும் நலமாக உள்ளனர் என்றும் தங்களின் முதல் குழந்தையின் வரவால் தாங்கள் குதூகலம் அடைந்திருப்பதாகவும் இளவரசர் ஹாரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார்.
தங்களுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும், தங்களின் மகிழ்ச்சியில் பங்கு பெற்றவர்களுக்கும் இளவரசர் ஹாரி நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.
Comments