Home Featured நாடு மீண்டும் பிரதமராகிறாரா மகாதீர்?

மீண்டும் பிரதமராகிறாரா மகாதீர்?

1044
0
SHARE
Ad

Tun Mahathirகோலாலம்பூர் – பக்காத்தான் ஹராப்பான் தன்னை மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்க வற்புறுத்துவதை முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது ஒப்புக் கொண்டிருக்கிறார்.

நேற்று வியாழக்கிழமை பேஸ்புக் நேரலையில் வந்த மகாதீர், தனது ஆதரவாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அப்போது, 14-வது பொதுத்தேர்தலில் எதிர்கட்சி வெற்றியடைந்தால், பிரதமராகப் பதவி ஏற்பீர்களா? என்ற கேள்விக்குப் பதிலளித்த மகாதீர், “என்னால் எனது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி நண்பர்களைப் புறக்கணிக்க முடியாது. ஒருவேளை அவர்களுக்கு அது போன்ற திட்டம் இருந்தால், அது ஏற்றுக் கொள்ளப்பட்டால், என்னைப் பிரதமராக பதவி ஏற்கச் சொல்லி வற்புறுத்துவார்கள்” என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

எனினும், மீண்டும் தான் பிரதமராகப் பதவி ஏற்க ஒப்புக்கொள்ளமாட்டேன் என்று மகாதீர் குறிப்பிட்டார்.