Home Featured தமிழ் நாடு பல கோடி நஷ்டத்திலும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கியது சென்னை சில்க்ஸ்!

பல கோடி நஷ்டத்திலும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கியது சென்னை சில்க்ஸ்!

766
0
SHARE
Ad

chennaisilksசென்னை – சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் கட்டிடம் முழுவதும் முற்றிலும் தீயில் கருவி சேதமடைந்துவிட்ட நிலையில், அக்கட்டிடத்தை இடித்துத் தரைமட்டமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அந்நிறுவனத்தில் வேலை செய்து வந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் கண்ணீர் சிந்தினர்.

பல கோடி ரூபாய் நஷ்டமடைந்திருக்கும் தங்களது நிறுவனத்திடம் சம்பளம் கேட்க முடியாமலும், மாதக் கடைசி என்பதால் குடும்பச் செலவுகளை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று தெரியாமலும் நிலைகுலைந்து போயிருந்தனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை, தங்களது ஊழியர்கள் அனைவருக்கும் மே மாத சம்பளம் வழங்கிய அந்நிறுவனம், சென்னை வேளைச்சேரி, கோவை, திருநெல்வேலி, திருச்சி, மதுரை என மற்ற கிளைகளில் அந்த ஊழியர்கள் தொடர்ந்து வேலை செய்யலாம் என்றும் அறிவித்திருக்கிறது.