புத்ராஜெயா – கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரையிலான நிலவரப்படி, சீனாவில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மலேசியர்கள் மொத்தம் 248 பேர் என உள்துறை அமைச்சு அறிவித்திருக்கிறது.
இது குறித்து உள்துறை அமைச்சரும், துணைப்பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கடன் அட்டை மோசடி உட்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட மலேசியர்கள் சீனாவில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
மேலும், அங்கு குற்றங்களில் ஈடுபடுவதாகச் சந்தேகிக்கப்படும் 100 பேரின் பட்டியலை மலேசியா சீன அரசிடம் சமர்ப்பித்திருப்பதாகவும் சாஹிட் குறிப்பிட்டிருக்கிறார்.
அதேவேளையில், சீனாவும், தமது நாட்டைச் சேர்ந்த 100 சந்தேக நபர்களைக் கண்டறிய மலேசியாவின் உதவியை நாடியிருக்கிறது.