Home கலை உலகம் அஜீத்குமாருக்கு அக்டோபரில் அறுவை சிகிச்சை

அஜீத்குமாருக்கு அக்டோபரில் அறுவை சிகிச்சை

657
0
SHARE
Ad

ajith-kumarசென்னை, மார்ச் 25- காலில் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால் புதிதாக எந்த படங்களையும் ஒப்புக்கொள்ளவில்லை என்று அஜீத்குமார் கூறியுள்ளார்.

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் அஜீத் நடித்துவருகிறார். இந்த படத்துக்காக காரை துரத்தும் காட்சி இடம்பெற்றது.

இதில் உண்மையாகவே அஜீத் நடித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. படப்பிடிப்புக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வலி நிவாரணி மாத்திரையை உட்கொண்டு அவர் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார்.

#TamilSchoolmychoice

இருந்தாலும் அவருக்கு அதிகமாக கால் வலி ஏற்பட்டதால் இதற்கு அறுவை சிகிச்சை மட்டுமே நிரந்தர தீர்வு என்று டாக்டர்கள் கூறினர்.

இதையடுத்து தற்போது நடித்து வரும் விஷ்ணுவர்தன் படம், மற்றும் விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கும் படங்களை முடித்துவிட்டு அக்டோபர் மாதம் 21ம் தேதி அறுவை சிகிச்சை செய்வதற்கு அவர் முடிவு செய்துள்ளார்.

அதற்கு பிறகு 4 மாத ங்கள் ஓய்வெடுக்கிறார். அதுவரை புதிதாக எந்த படத்தையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்று அஜித் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.