Home Featured கலையுலகம் அதிமுகவில் 150-க்கும் மேற்பட்ட அஜீத் ரசிகர்கள் இணைந்தனர்!

அதிமுகவில் 150-க்கும் மேற்பட்ட அஜீத் ரசிகர்கள் இணைந்தனர்!

791
0
SHARE
Ad

admkசென்னை – சென்னை அஜீத் ரசிகர்கள் 150-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். இவர்கள் அஜீத் இரசிகர் மன்றத்தலைவர் சரத் என்பவரின் தலைமையில் ஆவடி தொகுதி அதிமுக வேட்பாளர் மாஃபா க. பாண்டியராஜன், அமைச்சர் அப்துல்ரஹிம் ஆகியோர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

இவர்களை வரவேற்று பேசிய அதிமுக வேட்பாளர் க.பாண்டியராஜன், ஜெயலலிதாவின் ஆட்சியில்தான் சினிமாதுறை சுதந்திரமாக இயங்குகிறது. இங்கு தங்களை இணைத்துக் கொண்ட அஜீத் ரசிகர்கள் ஜெயலலிதாவின் ஆட்சி அமைய அயராது பாடுபடவேண்டும். இளைஞர்கள் தங்களது எதிர்காலத்தை வளமானதாக்க, வேலைவாய்ப்புகளைப் பெற என்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்வேன் என்றார்.