Home Featured இந்தியா இந்தியா முழுவதும் வெயிலின் தாக்கத்தால் 228 பேர் பலி!

இந்தியா முழுவதும் வெயிலின் தாக்கத்தால் 228 பேர் பலி!

781
0
SHARE
Ad

Summer-already-EPS (4)புதுடெல்லி – இந்தியா முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஒரிசா மாநிலத்தில் 118 டிகிரி வரை வெப்பம் பதிவாகி வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் ஒரிசா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இதுவரை 228 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

வெயிலின் தாக்கம் மேலும் நீடிக்கும் என சொல்லப்படும் நிலையில், ஒரிசாவில் மட்டும் கொளுத்தும் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 109ஆக உயர்ந்துள்ளது. ராஜஸ்தான், ஒரிசா, மகாராஷ்டிரம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்டு நீர் நிலைகள் வறண்டு காணப்படுகின்றன.

summerஇதனால் அங்குள்ள தமிழ்நாட்டிலும் 110 டிகிரிக்கு மேலாக வெப்பம் பதிவாகி வருகிறது. தெலுங்கானாவில் பத்ராசலம், கம்மம், நல்கொண்டா மற்றும் நிஜாமாபாத் ஆகிய நகரங்களில் அதிகபட்ச வெப்பநிலையாக 113 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது.

#TamilSchoolmychoice

வெயில் கொடுமையால் பாதிக்கப்பட்டு, இதுவரை 79 பேர் பலியாகிவிட்டனர். அதில் மஹபூப்நகர் மாவட்டத்தில் மட்டும் 39 பேர் உயிரிழந்தனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.