Home Featured கலையுலகம் 25 வருடங்களுக்குப்பின் கமல் படத்திற்கு பெயர் சூட்டும் இளையராஜா!

25 வருடங்களுக்குப்பின் கமல் படத்திற்கு பெயர் சூட்டும் இளையராஜா!

665
0
SHARE
Ad

ilayaraja-kamalசென்னை – தனது அடுத்த படத்தின் தலைப்பை இளையராஜா தேர்வு செய்திருப்பதாக கமல் தெரிவித்திருக்கிறார். கமல்-ஸ்ருதி ஹாசன் முதன்முறையாக இணையும் படம் வரும் 29-ஆம் தேதி நடிகர் சங்க நிலத்தில் தொடங்குகிறது.

இந்தப் படத்தின் மூலம் 11 ஆண்டுகளுக்குப்பின் இளையராஜா-கமல்ஹாசன் கூட்டணி மீண்டும் இணைகிறது. இந்நிலையில் இப்படத்தின் தமிழ் தலைப்பை இளையராஜா தேர்வு செய்துள்ளதாக கமல் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து கமல் “என்னுடைய அடுத்த படத்திற்கு எளிமையான மற்றும் சிலிர்ப்பூட்டும் ஒரு தலைப்பை கண்டுபிடித்துவிட்டேன். தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தயாராகும் இப்படத்தின் தமிழ் தலைப்பை இளையராஜாவும், இந்தி தலைப்பை சுரபாஜியும் தேர்ந்தெடுத்துள்ளனர்” எனக் கூறியிருக்கிறார்.  25 வருடங்களுக்கு முன் கமல் நடிப்பில் வெளியான ‘குணா’ படத்தின் தலைப்பை இளையராஜா தேர்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.