Home Featured தமிழ் நாடு கருணாநிதியும்-ஜெயலலிதாவும் வேட்புமனு தாக்கல் செய்தனர்!

கருணாநிதியும்-ஜெயலலிதாவும் வேட்புமனு தாக்கல் செய்தனர்!

961
0
SHARE
Ad

karunanidhi-nomination4545திருவாரூர் – திமுக தலைவர் கருணாநிதி, திருவாரூர் சட்டசபை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் இருந்தனர்.

திருவாரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் கருணாநிதி. இதையொட்டி இன்று மதியம் 12.00 மணியளவில் திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு காரில் வந்தார் கருணாநிதி. இதன்பிறகு, தேர்தல் நடத்தும் அதிகாரி முத்து மீனாட்சியிடம், கருணாநிதி வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

jayalalithaaஇதேபோல், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக முதல்வர் வேட்பாளர் ஜெயலலிதா தண்டையார்பேட்டை மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் நடத்தும் அலுவலர் பத்மஜாவிடம் மனுத்தாக்கல் செய்துள்ளார். முதல்வர் ஜெயலலிதாவுடன் சசிகலா அமைச்சர்கள் சிலரும் வந்தனர்.

#TamilSchoolmychoice