Home இந்தியா வாஜ்பாயி நூற்றாண்டு பிறந்த தினத்தை நினைவு கூர்ந்த ஸ்டாலின்!

வாஜ்பாயி நூற்றாண்டு பிறந்த தினத்தை நினைவு கூர்ந்த ஸ்டாலின்!

139
0
SHARE
Ad

சென்னை : பாஜகவின் முன்னாள் தலைவரும், இந்தியாவின் முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாயியின் நூற்றாண்டு பிறந்த தினம் நேற்று புதன்கிழமை (டிசம்பர் 25) கொண்டாடப்பட்டது.

அதனை முன்னிட்டு தமிழ் நாடு முதலமைச்சர் வாஜ்பாயியுக்கும் கலைஞர் கருணாநிதிக்கும் இடையில் நிலவிய நல்லுறவை நினைவுகூர்ந்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

“முன்னாள் பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் நூறாவது பிறந்தநாளில் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பினையும், நமது தலைவர் கலைஞர் அவர்களுடன் அவர் கொண்டிருந்த நட்புறவினையும் நினைவுகூர்கிறோம். வலதுசாரிக் கருத்தியல் கொண்டவராக இருந்தாலும், பிரதமர் பொறுப்பில் இருந்தபோது நாட்டின் மதச்சார்பின்மைப் பண்பை அவர் பேணிக்காத்தார். அவரது வாழ்வும் பணியும் நிலைத்து நிற்கும்!” என ஸ்டாலின் குறிப்பிட்டார்.