Home Featured நாடு பேராக் மாநிலத்தில் மே 6 பொதுவிடுமுறை என்பது வதந்தி!

பேராக் மாநிலத்தில் மே 6 பொதுவிடுமுறை என்பது வதந்தி!

635
0
SHARE
Ad

perakஈப்போ – வரும் மே 6-ம் தேதி, பேராக் மாநிலத்திற்கு பொதுவிடுமுறை என்ற செய்தியை அம்மாநில செயலகத்தைச் சேர்ந்த பேச்சாளர் இன்று மறுத்துள்ளார்.

“அது கடந்த ஆண்டு வந்த பழைய கட்டுரை”

“பேராக் சுல்தானின் முடிசூட்டுதலை முன்னிட்டு அந்த அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பிற்குப் பிறகு, பேராக் மாநில சபை கூடி அந்த பொதுவிடுமுறையை, சுல்தான் நஸ்ரின் முசுடின் ஷாவின் பிறந்தநாளான நவம்பர் 27-க்கு மாற்றியமைத்தது” என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

எனவே நட்பு ஊடகங்களில் தற்போது பரவி வரும் அந்தத் தவறான செய்தியை மக்கள் நம்ப வேண்டாம் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்து உண்மை நிலையை உறுதி செய்துகொள்ளும்படியும் அவர் குறிப்பிட்டுள்ளார்.