Home Featured கலையுலகம் அஜீத்திற்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை – விஷால்! (காணொளியுடன்)

அஜீத்திற்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை – விஷால்! (காணொளியுடன்)

844
0
SHARE
Ad

Vishal Ajithசென்னை – நடிகர் அஜீத்திற்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்று நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் கூறியுள்ளார். பொதுவாக நடிகர் அஜீத் திரைத்துறை சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை.

அதேபோல், சமீபத்தில் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை. இதனால் நடிகர் விஷால் கோபமாக இருந்தார் என்றும், நட்சத்திர கிரிக்கெட் போட்டியில், அஜீத் நடித்த வேதாளம் பட பாடலான ‘ஆலூமா டோலுமா’ ஒலிபரப்பிய போது, விஷால் அதை நிறுத்தச் சொன்னார் என்றும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் நடிகர் விஷால் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது “நடிகர் அஜீத்திற்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. எனக்கு நடிகர் அஜீத், விஜய், ரஜினிகாந்த், கமல்ஹாசன் என அனைவரையும் பிடிக்கும். நான் கூறாத பல விஷயங்களை ஊடகங்கள் எழுதுகிறது. அது எனக்கு வருத்தம் அளிக்கிறது” என்று கூறினார்.

#TamilSchoolmychoice