Home One Line P2 துப்பறிவாளன் 2: முதல் தோற்றம் வெளியீடு!

துப்பறிவாளன் 2: முதல் தோற்றம் வெளியீடு!

825
0
SHARE
Ad

சென்னை: நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்து இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றத் திரைப்படம் துப்பறிவாளன்.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

ஒரு நேர்மையான துப்பறிவாளராக விஷால் மற்றும் பிரசன்னா நடித்திருப்பார்கள்.

#TamilSchoolmychoice

இரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டிய இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இரண்டாம் பாகத்தில் விஷால், பிரசன்னா ஆகியோருடன் ரகுமான், கௌதமி நடித்த முதற்கட்ட படப்பிடிப்பு இலண்டனில் நடந்து முடித்தது.

ஒரு சில காரணங்களால் இப்படத்தை இயக்கிய மிஷ்கின் தனது பணியிலிருந்து வெளியேறினார். அதன் பிறகு நடிகர் விஷால் இந்த படத்தின் பணியைத் தொடர்ந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் முதல் தோற்றம் அண்மையில் வெளியாகியுள்ளது. “இலண்டனில் வேட்டை” என்று குறிப்பிடப்பட்டு இப்படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளனர்.