Home One Line P1 கொவிட்-19: ஸ்ரீ பெட்டாலிங் மசூதி மற்றும் நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் மீது முழுமையான சோதனை!

கொவிட்-19: ஸ்ரீ பெட்டாலிங் மசூதி மற்றும் நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் மீது முழுமையான சோதனை!

565
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஸ்ரீ பெட்டாலிங் மசூதியில் கொவிட்-19-க்கான சோதனையை சுகாதார அமைச்சின் அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு பிப்ரவரி 28-ஆம் தேதியன்று அம்மசூதியில் நடைபெற்ற ஒரு கூட்டத்திற்குப் பிறகு, கொரொனாவைரஸ் பாதிப்புக்கு உட்பட்டிருந்த நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.

சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், பங்கேற்பாளர்கள் மற்றும் ஊழியர்களின் முழு ஒத்துழைப்பையும் அமைச்சகக் குழு பெற்றதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“பங்கேற்பாளர்கள் அனைவரையும் கண்டறிந்து கண்காணிக்க லெம்பா பந்தாயிலிருந்து எங்கள் சுகாதாரப் பணியாளர்கள், பிற மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளும் ஆதரவு அளிக்கின்றனர். இது ஒரு கடினமான மற்றும் அச்சுறுத்தும் பணியாக இருக்கலாம். ஆனால், எல்லோரும் தங்களையும் சமூகத்தையும் பாதுகாக்க உதவ முடியும் என்பதால் நம் பொறுப்புகளை பகிர்ந்து கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்” என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை முகநூல் பதிவில் தெரிவித்தார்.

கிருமிநாசினி பணிக்காக மசூதி தற்காலிகமாக மூடப்படும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா நேற்று தெரிவித்தார்.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நச்சுயிரியின் (வைரஸின்) அறிகுறிகளை அனுபவிக்கத் தொடங்கினால் உடனடியாக பரிசோதிக்க வேண்டும் என்றும் டாக்டர் அடாம் கேட்டுக்கொண்டார்.