இந்த திரைப்படம் இயக்குனரின் முந்தைய முயற்சிகளைப் போலல்லாது, முழுக்கவும் அதிரடிக் காட்சிகளைக் கொண்டு நகர்த்தப்பட்டுள்ளது. சுந்தர்.சி படம் என்றால் முழுக்கவும் நகைச்சுவை நிரம்பி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளுக்கிடையிலான ஓர் அனைத்துலக பிரச்சனையில் இப்படத்தின் கதை கவனம் செலுத்துகிறது. விஷால், தமன்னாவைத் தவிர, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஆகான்ஷா பூரி, கபீர் டுஹான் சிங், யோகி பாபு மற்றும் ராம்கி ஆகியோர் துணை வேடங்களில் இப்படத்தில் நடிக்கின்றனர்.
ட்ரைடென்ட் ஆர்ட்ஸின் ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் இப்படம் துருக்கி மற்றும் அஜர்பைஜானில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். தீபாவளி பண்டிகையின் போது (அக்டோபர் 27), வெளியிடப்பட்ட இப்படத்தின் முன்னோட்டக் காணொளி 2 மில்லியனுக்கும் மேலான பார்வையாளர்களை எட்டியுள்ளது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்: