Home One Line P2 பெல்ஜியத்தில் குளிரூட்டப்பட்ட கொள்கலன் லாரியிலிருந்து 12 பேர் உயிருடன் மீட்பு!

பெல்ஜியத்தில் குளிரூட்டப்பட்ட கொள்கலன் லாரியிலிருந்து 12 பேர் உயிருடன் மீட்பு!

893
0
SHARE
Ad

பிரசெல்ஸ்: வடக்கு பெல்ஜியத்தில் கார் நிறுத்துமிடத்தில் குளிரூட்டப்பட்ட கொள்கலன் லாரியில் 12 புலம்பெயர்ந்தோரை உயிருடன் கண்டு பிடிக்கப்பட்டதாக பெல்ஜிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஓட்டுநர் இது குறித்து காவல் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கபட்டதாக மத்திய காவல் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

பழம் மற்றும் காய்கறிகளை ஏற்றிச் சென்ற ஓட்டுநர், சிரியா மற்றும் சூடான் வம்சாவளியைச் சேர்ந்த 12 வயது முதிர்ந்த ஆண்களை அந்த லாரிக்குள் கண்டதாகத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கடந்த வாரம், 39 புலம்பெயர்ந்தோர் பிரிட்டனில் குளிரூட்டப்பட்ட லாரியில் இறந்து கிடந்தனர். மனித கடத்தலுக்கு எதிரான போராட்டத்தின் பெருகிய ஆய்வை எதிர்கொள்ளும் பெல்ஜிய அதிகாரிகள், இது தொடர்பான விசாரணையில் பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் ஒத்துழைத்து வருகின்றனர்.