Home உலகம் ஈரோ 2020 : இத்தாலி 2 – பெல்ஜியம் 1; அடுத்தது அரை இறுதி ஆட்டத்தில்...

ஈரோ 2020 : இத்தாலி 2 – பெல்ஜியம் 1; அடுத்தது அரை இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின்-இத்தாலி மோதல்

1065
0
SHARE
Ad

மூனிக் (ஜெர்மனி) : மலேசிய நேரப்படி இன்று சனிக்கிழமை (ஜூலை 3) அதிகாலை 3.00 மணிக்கு நடைபெற்ற கால் இறுதிச் சுற்றுக்கான ஆட்டத்தில் பெல்ஜியம் – இத்தாலி இரண்டு நாடுகளும் களமிறங்கின.

ஜெர்மனியின் மூனிக் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இத்தாலி 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் பெல்ஜியத்தைத் தோற்கடித்து அரை இறுதி ஆட்டத்திற்குத் தேர்வாகியது.

இரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் பினால்டி கோல்களில் சுவிட்சர்லாந்தைத் தோற்கடித்தது.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து அரை இறுதி ஆட்டத்தில் இத்தாலி – ஸ்பெயின் மோதும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

2008, 2012-ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஐரோப்பியக் கிண்ணத்தை ஸ்பெயின் இரண்டு முறை வெற்றி கொண்டது. இதில் 2012-இல் இத்தாலியை 4-0 என்ற கோல் எண்ணிக்கையில் தோற்கடித்து கிண்ணத்தை வெற்றி கொண்டது ஸ்பெயின்.

இப்போது,ஸ்பெயினைப் பழிதீர்த்துக் கொள்ளும்  வாய்ப்பு இத்தாலிக்குக் கிடைத்திருக்கிறது. 1968-ஆம் ஆண்டில்தான் இத்தாலி ஐரோப்பியக் காற்பந்து போட்டிகளுக்கானக் கிண்ணத்தை வெற்றி கொண்டது. சில முறை இறுதிச் சுற்றுக்கும், அரை இறுதிச் சுற்றுக்கும் வந்தாலும் கிண்ணத்தை இத்தாலியால் அதன் பிறகு வெல்ல முடியவில்லை.

அரை இறுதி ஆட்டத்தில் 2012 தோல்விக்கு ஸ்பெயினை இத்தாலி பழிவாங்குமா?

அல்லது ஸ்பெயின் மீண்டும் இத்தாலியைத் தோற்கடித்து இறுதிச் சுற்று ஆட்டத்திற்கு முன்னேறுமா?

என்ற பரபரப்பு தற்போது காற்பந்து இரசிகர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

பெல்ஜியம், செக் குடியரசு, டென்மார்க், இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, உக்ரேன் ஆகியவையே கால் இறுதி ஆட்டத்திற்குத் தேர்வான 8 குழுக்களாகும்.

இன்று சனிக்கிழமை மற்ற இரு கால் இறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

முதல் ஆட்டத்தில் செக் குடியரசு டென்மார்க்குடன் மோதுகிறது. மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து உக்ரேனுடன் மோதுகிறது.