Home உலகம் ஈரோ 2020 : ஸ்பெயின் 1 – சுவிட்சர்லாந்து 1; பினால்டி கோல்களில் ஸ்பெயின் வெற்றி

ஈரோ 2020 : ஸ்பெயின் 1 – சுவிட்சர்லாந்து 1; பினால்டி கோல்களில் ஸ்பெயின் வெற்றி

988
0
SHARE
Ad

செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் (இரஷியா) : நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 2) மலேசிய நேரப்படி நள்ளிரவில் நடைபெற்ற கால் இறுதிச் சுற்றுக்கான ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளுக்கான ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தும் ஸ்பெயினும் மோதின.

இரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் வெற்றி பெற்றது.

முதல் பாதி ஆட்டத்தில் ஒரு கோல் போட்டு முன்னணியில் ஸ்பெயின் இருந்தது. எனினும் இரண்டாம் பாதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தும் ஒரு கோல் போட்டு சமநிலை கண்டது.

#TamilSchoolmychoice

கூடுதல் நேரம் வழங்கப்பட்டாலும் இரு குழுக்களும் தலா ஒரு கோல் எண்ணிக்கையில் ஆட்டத்தை சமநிலையாக முடித்துக் கொண்டதால் பினால்டி கோல்களின் மூலம் வெற்றியாளரைத் தேர்வு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இதில் ஸ்பெயின் வெற்றி பெற்றது.3-1 என்ற கோல் எண்ணிக்கையில் ஸ்பெயின் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 2012-ஆம் ஆண்டில் ஐரோப்பியக் கிண்ணத்தை வெற்றி கொண்ட ஸ்பெயின் அரை இறுதி ஆட்டத்திற்கு செல்வதால் மீண்டும் அந்தக் கிண்ணத்தைப் பெறும் வாய்ப்பு அந்நாட்டுக்குக் கிடைத்திருக்கிறது.