Home One Line P2 ‘அவன்-இவன்’ திரைப்படத்திற்குப் பிறகு ‘எனிமி’யில் இணையும் விஷால், ஆர்யா

‘அவன்-இவன்’ திரைப்படத்திற்குப் பிறகு ‘எனிமி’யில் இணையும் விஷால், ஆர்யா

750
0
SHARE
Ad

சென்னை: நடிகர் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் ‘எனிமி’ திரைப்படத்தின் முதல் தோற்றம் இன்று வெளியிடப்பட்டது. இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் – ஆர்யா இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கின்றனர்.

‘அவன் இவன்’ திரைப்படத்தில் விஷால், ஆர்யா இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

‘சக்ரா’ படத்தில் தற்போது நடித்துள்ள விஷால், அதன் பிறகு ‘எனிமி’ திரைப்படத்தை தொடங்கினார். ‘இருமுகன்’ படத்தைத் தொடர்ந்து ஆனந்த் ஷங்கர் இப்படத்தை இயக்குகிறார்.

#TamilSchoolmychoice

ஆர்யாவுக்கு இப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இன்று வெளியிடப்பட்ட முதல் தோற்றத்தில் விஷால் நீண்ட துப்பாக்கியோடு கம்பீரமாக இருக்கிறார். விஷால் இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.