Home Featured தமிழ் நாடு மு.க. ஸ்டாலினுக்கு ரூ. 4 கோடி சொத்து; வேட்புமனுத் தாக்கலில் தகவல்!

மு.க. ஸ்டாலினுக்கு ரூ. 4 கோடி சொத்து; வேட்புமனுத் தாக்கலில் தகவல்!

718
0
SHARE
Ad

stalin-nomination7சென்னை – திமுக பொருளாளர் ஸ்டாலின் தனக்கு ரூ. 4 கோடி சொத்து இருப்பதாக தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக, அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் போட்டியிடுகிறார்.

இதையொட்டி, அயனாவரம் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி கார்த்திகாவிடம் இன்று மதியம் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த தொகுதியில் இரண்டாவது முறையாக ஸ்டாலின் போட்டியிடுகிறார்.

தனது வேட்புமனுவில் ஸ்டாலின் தனக்கு ரூ. 4 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதாவது, தனது சொத்து மதிப்பு ரூ.4,13,83,988 எனக் கூறியுள்ள ஸ்டாலின், அதில் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.80.34 இலட்சம் எனவும், அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.3.33 கோடிஎனவும் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த 2006-ஆம் ஆண்டு 1.50 கோடியாக இருந்த ஸ்டாலினின் சொத்து மதிப்பு, கடந்த 2011-ஆம் ஆண்டு 2.11 கோடியாக உயர்ந்தது. தற்போது அது ரூ. 4 கோடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.