Home Featured நாடு சிறைக் கைதி ராம்குமார் மரணம் : 13 தடுப்புக் காவல் கைதிகள் மீது கொலைக்  குற்றச்சாட்டு!

சிறைக் கைதி ராம்குமார் மரணம் : 13 தடுப்புக் காவல் கைதிகள் மீது கொலைக்  குற்றச்சாட்டு!

595
0
SHARE
Ad

jail-prisonஷா ஆலாம் –இரண்டு வாரங்களுக்கு முன்னர் சுங்கை பூலோ சிறைச்சாலையில் மரணமடைந்த முன்னாள் குத்துச் சண்டை வீரர் ராம் குமாரை கொலை செய்த குற்றத்திற்காக 13 தடுப்புக் காவல் கைதிகள் நேற்று இங்குள்ள மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

25 வயதான ராம்குமார் கடந்த 2013ஆம் ஆண்டில் மியன்மாரில் நடைபெற்ற 69 கிலோ எடை பிரிவு குத்துச் சண்டை போட்டியில் மலேசியாவுக்காக வெள்ளிப் பதக்கம் பெற்றவராவார். கிள்ளானில் ஆள்கடத்தல் குற்றத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

குற்றம் சாட்டப்பட்டிருக்கும் 13 பேர் பின்வருமாறு:

  1. முகமட் முஸ்தாகிம் அனாஸ் (24)
  2. முகமட் ஹிஷாம் முகமட் டாவுட் (33)
  3. முகமட் பைசால் மாமுட் (33)
  4. முகமட் பாசிரான் முகமட் பாருடின் (27)
  5. அகமட் ஹானாபி அஹ்மாட் (47)
  6. பாரிக் அஷ்லாமி அப்துல்லா (24)
  7. சாரோல் அபிண்டி சாஹானுடின் (25)
  8. முகமட் இசாருடின் இஸ்மாயில் (25)
  9. முகமட் ரஜிஸ் அப்துல் ரஹிம் (33)
  10. முகமட் சாக்கி ஷாரி (30)
  11. நூர் ஃபாட்ஸ்லீ சிசான் (24)
  12. சோபியான் டாஹ்லான் (34)
  13. நோரிடில் பித்ரி நோர்டின் (31)
#TamilSchoolmychoice

சுங்கை பூலோ சிறைச்சாலையில் உள்ள தடுப்புக் காவல் அறையொன்றில் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி மத்தியானம் 12.45 மணி முதல் 1.00 மணிக்குள்ளாக, மேற்கண்ட 13 பேரும் கூட்டாக இந்தக் கொலைக் குற்றத்தைப் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்கள்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாருக்கும் வழக்கறிஞர் பிரதிநிதித்துவம் இல்லை.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

ராம்குமார் மரணம் தொடர்பான மரண ஆய்வு அறிக்கை, உடல் பரிசோதனை ஆய்வுகள், இராசயன ஆய்வாளரின் அறிக்கைகள், மரபணு சோதனை அறிக்கைகள் ஆகியவை இன்னும் முழுமையாகக் கிடைக்காத காரணத்தால் வழக்கை மே 26ஆம் தேதிக்கு நீதிபதி ஃபாரா அசுரா முகமட் சாட் ஒத்தி வைத்தார்.

சுங்கை பூலோ சிறைச்சாலையில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து ராம்குமார் கூர்மையான ஆயுதம் ஒன்றால் பின்முதுகில் குத்தப்பட்டு மாண்டார் என தகவல் ஊடகங்கள் தெரிவித்திருந்தன.