Home Featured உலகம் பிரின்ஸ் மரணத்திற்குக் காரணம் எயிட்ஸ் நோய் – அதிர்ச்சித் தகவல்!

பிரின்ஸ் மரணத்திற்குக் காரணம் எயிட்ஸ் நோய் – அதிர்ச்சித் தகவல்!

781
0
SHARE
Ad

prince-singer-US-deadமின்னசோட்டா (அமெரிக்கா) – அமெரிக்காவின் பிரபல இசைக் கலைஞரும், ஒரு கால கட்டத்தில் மறைந்த மைக்கல் ஜாக்சனுக்கு இணையாகப் பேசப்பட்டவருமான பிரின்ஸ், கடந்த வாரம் திடீரென மர்மமான முறையில் இறந்து போனது உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்நிலையில், அவரது மரணத்திற்கான காரணம் என்னவென்பது, அனைத்துலக ஊடகங்களில் மெல்ல கசியத் தொடங்கியிருக்கின்றது.

பிரின்ஸ் இறந்ததன் பின்னணியில் கூறப்படும் காரணம் என்னவென்றால், கடந்த ஆறு மாதங்களாக அவர் எயிட்ஸ் நோயால் அவதிப்பட்டு வந்தது தான்.

#TamilSchoolmychoice

கடந்த 1990-ம் ஆண்டுகளில், எச்ஐவி தொற்றுக்கு ஆளான பிரின்ஸ், தான் எடுத்து வந்த தொடர் சிகிச்சைகளை சில காலங்களுக்கு முன் நிறுத்திவிட்டு, கடவுள் தன்னைக் காப்பாற்றுவார் என்று முழுமையாக நம்பியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 19-ம் தேதி, தனது உடல்நிலை மிக மோசமான நிலையில் இருப்பதை, பிரின்ஸ் தனது நண்பர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவித்துள்ளதாக, ‘தி நேஷனல் என்கொயரெர்’ செய்தி வெளியிட்டுள்ளது.

அவரது இரத்தத்தில் அணுக்களின் அளவில் மிகவும் குறைவாக இருப்பதாகவும், உடல் வெப்பநிலை அபாயகரமான நிலையில் 94 டிகிரிக்குக் குறைந்து விட்டதாகவும் (இயல்பாக 98.6 இருக்க வேண்டும்) மருத்துவர்கள் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

“அவரது உடம்பில் இரும்புச்சத்து மிகவும் குறைவானதால், உடல் தளர்ந்து அடிக்கடி தடுமாறினார். அவர் எப்போதாவது தான் சாப்பிடுவார், அதுவும் சாப்பிட்டவுடன் எல்லாம் வெளியேறிவிடும்” என்றும் பிரின்சுக்கு நெருக்கமானவர்கள் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.

இறப்பதற்கு முதல் நாள் இரவு மருந்துக்கடைகளைத் தேடி ஓடிய பிரின்ஸ், தனக்கான மருந்துகளை பதட்டத்துடன் வாங்கியுள்ளார்.

அவருக்கு மருந்துகளை வழங்கிய வால்கிரீன் என்ற மருந்துக்கடையின் ஊழியர் ஊடகங்களில் அளித்துள்ள பேட்டியில், “நேற்று இரவு அவர் மிகவும் பதட்டத்துடன் காணப்பட்டார். உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம் என்று அவரிடம் கூறினோம்” என்று ‘தி நேஷனல் என்கொயரெர்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 21-ம் தேதி, மின்னசோட்டா நகரில் உள்ள ஒரு ஸ்டுடியோ கட்டிடத்தின் மின்தூக்கியில் (லிப்ட்) மயக்கமுற்ற நிலையில் காணப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

சுமார் 40 ஆண்டுகாலம், அமெரிக்க இசையுலகின் குறிப்பிடத்தக்க கலைஞராக உலா வந்த ஒரு கலைஞனின், இறுதி நாட்கள் இப்படி ஒரு சோகத்தில் இருந்துள்ளது உலக அளவில் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.