Home இந்தியா எச்ஐவி பாதிப்பில் இந்தியா முதலிடம்!

எச்ஐவி பாதிப்பில் இந்தியா முதலிடம்!

1039
0
SHARE
Ad

hivபுதுடெல்லி – உலக அளவில் 2016-ம் ஆண்டில் புதிதாக எச்ஐவி பாதிப்புக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சித் தகவலை ஐ.நா வெளியிட்டிருக்கிறது.

“ஆசியா-பசிபிக் நாடுகளில், பலருடன் பாலியல் உறவு, ஓரினச்சேர்க்கை, போதை ஊசி பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எச்ஐவி கிருமி பரவுகிறது.”

“2016-ம் ஆண்டில் இந்த பாதிப்புக்கு உள்ளானோரில் இந்தியாவைச் சேர்ந்தவர்களே அதிகம். அதில் குறிப்பாக 95 விழுக்காட்டினர் இந்தியா, சீனா, இந்தோனிசியா, பாகிஸ்தான், வியட்நாம், மியன்மார், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மலேசியா உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்தவர்கள்” என்று ஐநா அறிக்கை கூறுகின்றது.