ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் நிறுவனமாகும்.
ஏற்கனவே, ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடித் திட்டங்களாலும், சிறப்புக் கழிவுகளாலும், தங்களின் வருமானத்தில் பெரும் இழப்பை எதிர்நோக்கி வரும் மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள், இன்றைய புதிய அறிவிப்பினால் மேலும் கலக்கமடைந்திருக்கின்றன.
பல்வேறு துறைகளைச் சார்ந்த தொழில்களில் முதலீடுகள் செய்திருப்பதன் மூலம் அதிலிருந்து கிடைக்கும் பெரும் வருமானத்தை ரிலையன்ஸ் ஜியோ தனது தொலைத் தொடர்பு நிறுவனத் திட்டங்களுக்காக செலவழித்து வருகின்றது.
இருப்பினும், இந்தியாவில் இன்னும் ஏறத்தாழ 500 மில்லியன் பயனர்கள் 4-ஜி எனப்படும் அதிநவீன, அதிவிரைவு தொழில்நுட்பம் கொண்ட செல்பேசிகளைப் பயன்படுத்தாமல் இருக்கின்றனர். இந்தப் பிரிவினரைக் கவர்வதை நோக்கமாகக் கொண்டுதான் ரிலையன்ஸ் தற்போது தனது புதிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரிலையன் ஜியோ சேவைகள் முழுக்க முழுக்க 4-ஜி தொழில்நுட்பத்தில் இயக்கப்பட்டு வருகின்றன என்பதால், இன்றைய புதிய அறிவிப்பின் மூலம் இந்த 500 மில்லியன் பயனர்களைக் கவர்ந்து தனது சந்தாதாரர்களாக அவர்களை மாற்றும் அடுத்த கட்ட முயற்சிக்கு ரிலையன்ஸ் ஜியோ ஒரேயடியாகத் தாவியிருக்கின்றது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய இலவச செல்பேசிக்கு ‘ஜியோபோன்’ எனப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.