அடுத்த இரண்டாவது நிலையில் இந்தியாவின் கௌதம் அடானி ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக உருவெடுத்துள்ளார்.


இருவருமே குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பொதுவாக குஜராத் மாநிலத்தினர் வணிகத்தில் தீவிரமாக ஈடுபடுபவர்கள். உலகம் எங்கும் பல நாடுகளில் வணிகத்துறையில் முன்னணி வகிப்பவர்கள் குஜராத் சமூகத்தினர்தான்.
மலேசியாவிலும் குஜராத் சமூக வணிகத்தினர் பலர் வணிகத் துறையில் ஈடுபட்டு பணக்காரர்களாக இருக்கிறார்கள்.
ஆசியாவின் முதல் பணக்காரரான அம்பானியின் சொத்து மதிப்பு 76 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டிருக்கும் வேளையில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும் கௌதம் அடானியின் மதிப்பு 67.6 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆசியாவில் இரண்டாவது பெரிய பணக்காரர் இடத்தைப் பிடித்திருக்கும் கௌதம் அடானி உலக அளவில் 14-வது பணக்காரராக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறார்.
அம்பானியோ உலக அளவில் 13-வது இடத்தைப் பிடித்திருக்கிறார். அண்மையக் காலங்களில் அடானியின் நிறுவனங்களின் பங்கு விலைகள் பங்குச் சந்தையில் அதிக அளவில் உயர்ந்திருக்கின்றன. அதன் அடிப்படையில்தான் கௌதம் அடானியின் சொத்து மதிப்பும் உயர்ந்திருக்கிறது.
கடந்த ஓராண்டில் மட்டும் அடானியின் சொத்து மதிப்பு 34 பில்லியன் டாலருக்கு உயர்ந்திருக்கிறது.
இதுவரையில் இரண்டாவது இடத்தில் இருந்த சீனாவின் சோங் ஷான்ஷான் தற்போது மூன்றாவது இடத்தை அடைந்திருக்கிறார்.