Home இந்தியா ஹிண்டன்பர்க் அறிக்கை: இந்தியப் பங்குச் சந்தையில் பாதிப்பில்லை!

ஹிண்டன்பர்க் அறிக்கை: இந்தியப் பங்குச் சந்தையில் பாதிப்பில்லை!

392
0
SHARE
Ad

புதுடில்லி : ஹிண்டன்பர்க் என்னும் ஆய்வு மையம் இந்தியப் பங்குச் சந்தை குறித்தும் அதன் தலைவர் மாதபி குறித்தும் சில முறைகேடுகள் இருப்பதாக வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து  இந்தியப் பங்குச் சந்தை சரிவு கண்டாலும் பெரிதாக எதிர்பார்த்த பாதிப்புகளை அடையவில்லை.

அதானி தொடர்புடைய வெளிநாட்டு நிதியில் (ஆஃப் ஷோர்) SEBI என்னும் இந்தியப் பங்குப் பரிமாற்ற வாரியத்தின் தலைவருக்கு பங்கு இருப்பதாக ஹிண்டன்பர்க் என்னும் ஆய்வு மையம் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இன்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 12) இந்தியப் பங்குச் சந்தை வீழ்ச்சியடையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

எதிர்க்கட்சிகளும் இந்த குற்றச்சாட்டை கையிலெடுத்துக் கொண்டு ஆளும் பாஜக அரசை சாடத் தொடங்கின. எனினும் இந்தியப் பங்குச் சந்தைகளில் எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை.

#TamilSchoolmychoice

இந்தியப் பங்குப் பரிமாற்ற வாரியத்தின் தலைவரான மாதபி அவருக்கு எதிரான  குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். தலைவர் பொறுப்பை ஏற்கும் முன்னரே இந்த  முதலீடுகள் செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 11) ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டு, அமெரிக்க முதலீட்டாளர் ஹிண்டன்பர்க் ரிசர்ச் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தனர்.

ஹிண்டன்பர்க் அறிக்கையை புச் தம்பதி “நற்பெயரைக் கெடுக்கும் முயற்சி” என்று கூறுகின்றனர்.ஹிண்டன்பர்க் குறிப்பிட்ட, “அதானி பங்கு கையாடல்” என்ற குற்றச்சாட்டுடன் தொடர்புடைய நிதியில் தாங்கள் செய்த முதலீடு, மாதபி செபியில் சேர்வதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே செய்யப்பட்டது என்று புச் தம்பதி தெரிவித்தனர்.