Home நாடு பிகேஆர் அமைச்சர் மாற்றப்படுவாரா? அமைச்சரவை மாற்றம் இல்லை என்கிறார் அன்வார்!

பிகேஆர் அமைச்சர் மாற்றப்படுவாரா? அமைச்சரவை மாற்றம் இல்லை என்கிறார் அன்வார்!

164
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : விரைவில் அமைச்சரவை மாற்றம் நிகழும் என்றும் பிகேஆர் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் நீக்கப்படுவார் அல்லது மற்றொரு அமைச்சுக்கு மாற்றப்படுவார் என ஆரூடங்கள் எழுந்துள்ளன. நடப்பு பிகேஆர் மந்திரி பெசார் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்படுவார் என்றும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிகேஆர் கட்சி சார்பில் சிலாங்கூர் மந்திரி பெசாராக இருக்கும் அமிருடின் ஷாரி, நெகிரி செம்பிலான் மந்திரி பெசாராக இருக்கும் அமினுடின் ஹாருண் இருவருமே நாடாளுமன்ற உறுப்பினர்களாவர். அமிருடின் ஷாரி கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர். அமினுடின் ஹாருண் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினர்.

இதற்கிடையில் அமைச்சரவை மாற்றம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார். இன்று திங்கட்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

#TamilSchoolmychoice