Home Featured நாடு தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் வெள்ளி விழா இலக்கியப் போட்டிகள்

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் வெள்ளி விழா இலக்கியப் போட்டிகள்

2677
0
SHARE
Ad

Wisma-Tun-Sambanthan-nlfcs-featureதேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான் ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம், 25-ஆம் ஆண்டு, வெள்ளி விழாப்போட்டிகளாக,  சிறுகதை, மரபுக்கவிதை, கட்டுரை, புதுக்கவிதை, மாணவர்களுக்கான சிறுகதை எழுதும் போட்டிகளைக் கடந்த ஆண்டுகளைப்போலவே இந்தாண்டும் நடத்துகின்றது. இலக்கியத்துறையில் ஆர்வமுள்ள எழுத்தாளர்களுக்கும், மாணவர்களுக்கும் என இப்போட்டிகள் இரு பிரிவுகளாக நடத்தப்படுகின்றன.

  1. நோக்கம்

தமிழ்மொழிக்கும் இனத்திற்கும் கீழ்க்காணும் துறைகள் சார்ந்து மிகுபயன் விளைவித்தல்.

அ.  மொழிசார்ந்த இலக்கிய வடிவங்களின் புதிய பரிணாம வளர்ச்சிகள்.

#TamilSchoolmychoice

ஆ.  இனம் சார்ந்த கலை, கலாச்சாரப்பண்பாட்டு கூறுகளை வளப்படுத்துதல்.

இ.  சமுதாய முன்னேற்றத்திற்கு கல்வி, அறிவியல், வாணிகம், தொழில் சார்ந்த படைப்புக்களின் வழி வாழ்க்கை மேம்படுதல்.

ஈ.   மனிதநேயமும் அகமேம்பாடும் வளர்தல்.

NLFCS-logo-1பரிசுத்தொகைகள்

  1. முதல் பரிசு   –  மலேசிய ரிங்கிட்                 –    2,500
  2. இரண்டாம் பரிசு –  மலேசிய ரிங்கிட்                 –   1,750
  3. மூன்றாம் பரிசு   –  மலேசிய ரிங்கிட்                 –    1,250
  4. ஆறுதல் பரிசுகள்   –  மூன்று தலா மலேசிய ரிங்கிட்   –     500
  1. பிரிவுகள்

(i)    பொது

அ.   சிறுகதை

ஆ.   கட்டுரை

இ.   மரபுக்கவிதை

ஈ.    புதுக்கவிதை

(ii). மாணவர்

அ. சிறுகதை

nlfcs logoபடைப்பு

அ. துறை  –  கொடுக்கப்பட்டிருக்கும் ஏதேனும் ஒரு துறைச்சார்ந்ததாக இருக்க வேண்டும்

ஆ. மொழி –  தமிழ்

இ. மொழித்தரம்  – தமிழ்மொழியின் இலக்கணம், சொல்லாட்சி, மரபு ஆகிய கூறுகளில் தரமுடையதாக இருக்க வேண்டும்.

ஈ.  பங்கேற்புத்தகுதி – கொடுக்கப்படும் தலைப்புக்கேற்பவும் சொந்தப் படைப்பாகவும் இருக்க வேண்டும்.

  1. படைப்பாளர் தகுதிகள்

அ. பொதுப்பிரிவு

மலேசிய நாட்டு குடியுரிமையுள்ள எழுத்தாளர்கள் மட்டுமே இந்தப்போட்டிகளில் கலந்து கொள்ள முடியும். ஒருவர் ஒரு துறையில் ஒரு படைப்பை மட்டுமே போட்டிக்கு அனுப்பி வைக்கமுடியும். படைப்புகள் தங்களது சொந்த படைப்பு என்பதை உறுதிப்படுத்தும் கடித த்துடன் தங்களின் தெளிவான அடையாள அட்டையின் நகலும், அண்மையில் எடுக்கப் பட்டப் புகைப்படமும் இணைக்கப் பட்டிருக்க வேண்டும்.

படைப்பாளர்கள் தமது அசல் படைப்புடன் மேலும் இரு நகல்கள் எடுத்து 3 படிகளாக அனுப்பி வைக்கவேண்டும்.

ஆ. மாணவர் பிரிவு

மாணவர் பிரிவு படைப்பாளர்கள், உயர் கல்விக்கூடங்கள் (ஆறாம் படிவம் / கல்லூரிகள் / மெட்ரிகுலேஷன்) மற்றும் பல்கலைக் கழகங்களில் முழுநேரமாக பயில்கின்றவர்களாக இருக்கவேண்டும். போட்டிக்கு அனுப்பப்படும் படைப்புகள் தங்கள் சொந்தப்படைப்பு என்பதை உறுதி செய்யும் வகையில், பொறுப்பாசிரியரின் உறுதிச்சான்றினையும் இணைத்து, தங்களது தெளிவான அடையாள அட்டையின் நகலுடன், அண்மையில் எடுத்துக்கொண்டப் புகைப்படத்தோடு   அனுப்புதல் வேண்டும்.

Wisma-Tun-Sambanthan-nlfcsபோட்டிப்பிரிவுகள்

அ. சிறுகதை

சிறுகதைகள் மனித வாழ்வியல்  நிகழ்வுகள், வாழ்க்கையோடு ஒட்டிய சம்பவங்கள், சமுதாய உணர்வுகள், சீர்திருத்தக்கருத்துக்கள் இவற்றை  சுவைப்படச் சித்தரிப்பதாக 5 பக்கங்களுக்குள்  அமைய வேண்டும்.

ஆ. மரபுக்கவிதை

எண்சீர். அறுசீர் விருத்தங்களாகவும், நான்கடி சந்தப்பாடலாகவும் “ காலச்சுவடுகள் ”  என்ற தலைப்பில் 80 வரிகளுக்கு மேற்போகாமல், கவிதைகள் எழுதப்பட வேண்டும். மலேசியத்தமிழர்களின் முன்னேற்றம், மேன்மைக்கான வழிகள் என்ற கருப்பொருள் நாட்டப்படுவதுடன், மரபு பிசகாமல் கவிதைகள் அமைய வேண்டும். மேலும் ஓவ்வொரு படைப்பிலும் 10 உவமைகளுக்கு குறையாமல் இடம் பெற வேண்டும்.

இ. புதுக்கவிதை

“ சுவடுகள் ” என்ற பொருளில் 80 வரிகளுக்கு மிகாமல் புதுக்கவிதை அமைய வேண்டும். எடுத்துக்கொண்டுள்ள தலைப்பை உள்ளடக்கிய புதுக்கவிதைகளாகவும் இருக்கவேண்டும்.

ஈ. கட்டுரை

  1. நமது நாட்டில் தமிழ்ப்பள்ளிகளின் நிலைமையும் எதிர்காலமும்
  2. தொழில் நுட்பக்கல்வியில் இந்தியர்களின் மேம்பாடு
  3. சமுதாயப் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளும் வசதிகளும்

நாட்டில் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக வாழ்கின்ற இந்தியர்கள் கடந்து வந்தக்காலம், இன்றைய சூழ்நிலை, எதிர்காலச்சவால்களை உள்ளடக்கிய ஆய்வுக்கட்டுரையாகவும், மூன்று எடுத்துக்காட்டுகளைக் கொண்டும் அமைய வேண்டும். மேற்கண்ட தலைப்பில் 8 பக்கங்களுக்கு   மேற்போகாமல் கட்டுரை அமைய வேண்டும்.

உ. பொது விதிகள்

(i) எல்லா படைப்புகளும் கணிணியில் தட்டச்சு ( MS Unicode font 12 / எழுத்துரு 12)  செய்து அனுப்பட வேண்டும்.

(ii) போட்டிக்கு அனுப்பிவைக்கப்படும் படைப்புகள் அனைத்தும் வேறு எந்த நூல்களிலோ, சிறுகதை, கவிதைத் தொகுப்புகளிலோ, நாளிதழ்களிலோ, மாத, வார இதழ்களிலோ பிரசுரிக்கப் பட்டவையாகவோ அல்லது மின் ஊடகங்களில் வெளி வந்தவைகளாகவோ இருக்கக்கூடாது.

(iii) கலந்துக்கொள்ளும் எழுத்தாளர்கள், தனித்தாளில் தங்களின் முழுப்பெயர், அடையாள அட்டையின் நகல், புனைப்பெயர், ஆகியவற்றோடு முகவரியையும் ஆங்கிலத்தில் எழுதி, படைப்புகளுடன் இணைத்து அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

(மேற்குறிப்பிட்டுள்ள ஆவணங்களும், தகவல்களும் இணைக்கப்படாவிடில். அனுப்பப்படும் படைப்புகள் போட்டிகளுக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது)

ஊ. நடுவர்கள்

தேசிய நில நிதி கூட்டுறவு சங்க, டான் ஸ்ரீ கே,ஆர் சோமா மொழி இலக்கிய அறவாரியம் நியமிக்கின்ற நடுவர்களால்,  வெற்றிப்பெறும் படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும்.  நடுவர்களின் முடிவே இறுதியானதாக இருக்கும். முடிவுகள் சம்பந்தமாக எந்த விதக்கடித தொடர்பும் வைத்துக்கொள்ளப்பட மாட்டாது. கூட்டுறவு சங்கத்தில் தற்போது பணிபுரிபவர்கள் இந்தப்போட்டியில் கலந்துக் கொள்ள இயலாது.

போட்டிக்குறிய எல்லா படிவங்களும் எதிர்வரும் 31.7.2017 ஆம் நாளுக்குள் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

நிர்வாக இயக்குனர்

(வெள்ளி விழா இலக்கியப்போட்டிகள்)

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம்

டான் ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியம்

10 வதுமாடி,   விஸ்மா துன் சம்பந்தன்

2, ஜாலான் சுலைமான், த.பெ. எண்12133

50768 கோலாலம்பூர்

 

THE MANAGING DIRECTOR

NATIONAL LAND FINANCE CO-OPERATIVE SOCIETY

Tan Sri K.R.Soma Language & Literary Foundation

National land Finance Co-operative Society Ltd

Level 10, WismaTunSambanthan

2, Jalan Sulaiman, PetiSurat 12133,

50768 Kuala Lumpur