Home நாடு டத்தோ பா.சகாதேவன் துணைவியார் டத்தின் எஸ்.பார்வதி காலமானார்

டத்தோ பா.சகாதேவன் துணைவியார் டத்தின் எஸ்.பார்வதி காலமானார்

2888
0
SHARE
Ad

தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ பா.சகாதேவன் அவர்களின் துணைவியார் டத்தின் எஸ்.பார்வதி (படம்) இன்று திங்கட்கிழமை (அக்டோபர் 17) இரவு 8.30 மணியளவில் காலமானார்.

71 வயதான டத்தின் பார்வதி அவர்களின் இறுதிச் சடங்குகள் நாளை செவ்வாய்க்கிழமை அக்டோபர் 18, பிற்பகல் 2.00 மணி முதல் – 3:00 மணிவரை எண்: 13 Jalan Tempinis 3, Lucky Garden, Bangsar, Kuala Lumpur  என்னும் முகவரியில் உள்ள அவர்தம் இல்லத்தில் நடைபெற்று அதன் பின்னர் அன்னாரின் நல்லுடல் செராஸ் மின்சுடலைக்குத் தகனத்துக்காகக் கொண்டு செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்பில் தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்க அலுவலகம் நாளை செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 18) மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.